தென் சீன பகுதியில் சூறாவளி காற்றுடன் கன மழை

தென் சீனா பகுதியில் உள்ள குனாக்டாங் மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறித்து வீசப்பட்டன.
தென் சீன பகுதியில் சூறாவளி காற்றுடன் கன மழை
x
தென் சீனா பகுதியில் உள்ள குனாக்டாங் மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறித்து வீசப்பட்டன. கரு மேகங்கள் சூழ்ந்து கடும் மழைப் பொழிவு ஏற்பட்ட நிலையில், சூறாவளிக் காற்றும் சுழன்றடித்ததால், கடும் சேதம் ஏற்பட்டது. மரங்கள் வேரோடு பெயர்த்து வீசப்பட்டன. கப்பல்கள் பாதுகாப்பாக நிலை நிறுத்தப்பட்டன. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியது. மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், அந்தப் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்