"ஊரடங்கு உத்தரவை நீக்கியதால் கொரோனா பாதிப்பு அதிகம்" - உலக சுகாதார அமைப்பு

உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா இன்னும் தீவிரம் அடைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை நீக்கியதால் கொரோனா பாதிப்பு அதிகம் - உலக சுகாதார அமைப்பு
x
தற்போது  பல நாடுகளில்  ஊரடங்கு உத்தரவை நீக்கியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் போதிய சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தினால் கொரோனா தீவிரமடைந்து உள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, தெற்கு நாடுகளில் பாதிப்பு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத இந்த நேரத்தில், அனைத்து நாடுகளும் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில், கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்