அதிபர் டிரம்பின் செயல் வருத்தம் அளிக்கிறது - ஐ.நா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பாய ஊழியர்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் பொருளாதார மற்றும் பயண தடைகளை அங்கீகரித்தது, வருத்தம் அளிப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்பின் செயல் வருத்தம் அளிக்கிறது - ஐ.நா
x
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீர்ப்பாயத்தின் ஊழியர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகளை டிரம்ப் அங்கீகரித்தார். இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் கூறுகையில், டிரம்பின் செயல் வருத்தம் அளிப்பதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்