இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது
x
லடாக் பகுதிக்கு அருகே உள்ள சீனாவின் மோல்டோ என்கிற பகுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பாக 14 வது படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனாவின் தெற்கு ஜின்சியாங் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியூ லின் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

* கிழக்கு ஆசியாவிற்கான இந்திய துணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா மற்றும் சீன ராணுவ விவகாரங்களுக்கான பொது இயக்குநர் வூ ஜியாங்கோ நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

*ஆக்கபூர்வ முறையில் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண  இதில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

*சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இந்த எல்லை பிரச்சினை  மே 5ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

* மே 5-ல் 250-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள்  பங்காங் சோ என்ற இடத்தில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

* மே 9 ஆம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது.இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

* இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீன படைகள் பலமுறை வரம்பு மீறல் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதனைத்  தொடர்ந்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது.

* கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

* சீனாவின் நடவடிக்கைக்கு  பதில் நடவடிக்கையை தொடங்கி இருப்பதாக ஜூன் 3 ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது இருநாடுகள் இடையிலான எல்லைப் பிரச்சனை இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

* எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை செயலாளர்கள் மட்டத்தில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்