"ரஷ்யாவிற்கு கனடா ஆதரவு அளிக்காது" - கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்

ஜி7 மாநாட்டில் உறுப்பினராக மீண்டும் ரஷ்யாவை இணைப்பதற்கு கனடா ஆதரவு தராது என்று அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு கனடா ஆதரவு அளிக்காது - கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்
x
ஜி7 மாநாட்டில் உறுப்பினராக மீண்டும் ரஷ்யாவை இணைப்பதற்கு கனடா ஆதரவு தராது என்று அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதம் வரை தள்ளி வைப்பதாக அறிவித்த அதிபர் டிரம்ப், இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா,  தென் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஏற்கனவே  உக்ரேன் மீது பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதால் ஜி8 மாநாட்டில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக் காட்டிய கனடா அதிபர், சர்வதேச சட்டங்களை தொடர்ந்து மீறும் ரஷ்யாவிற்கு கனடா ஆதரவளிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்