கொரோனாவிற்கு ஆன்டிபாடி பிளாஸ்மா சிகிச்சை - ஜெர்மனி விஞ்ஞானிகள் நம்பிக்கை

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் பெறப்படும் ஆன்டிபாடி பிளாஸ்மா மூலம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவிற்கு ஆன்டிபாடி பிளாஸ்மா சிகிச்சை - ஜெர்மனி விஞ்ஞானிகள் நம்பிக்கை
x
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் பெறப்படும் ஆன்டிபாடி பிளாஸ்மா மூலம், கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஜெர்மனியின் எர்லாங்கன் பல்கலைக்கழக  விஞ்ஞானிகள், மிகவும் பாதிப்பிற்குள்ளான நபருக்கு, தானம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் பெறப்படும் ஆன்டிபாடி பிளாஸ்மா மூலம், கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெறப்பட்ட ஆன்டிபாடி பிளாஸ்மாவை உட்செலுத்துவதன் மூலம் நோயிலிருந்து விடுபட முடியும் என தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் இந்த முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், கொடையாளிகளிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற்ற பின்னர், அதில் நோய் தொற்று உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட பின், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை பயனுள்ள அணுகுமுறை என அந்நாட்டு நோய் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் கொரோனாவில் இருந்து விடுபட்டவர்களிடம் தானம் பெறப்பட்ட ஆண்டிபாடி பிளாஸ்மா மூலம், ஏராளமான கொரோனா நோயாளிகள் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்