அப்போது ஸ்பானிஷ் புளூவிலிருந்து தப்பிய முதியவர் - தற்போது கொரோனா வைரஸில் இருந்தும் தப்பியுள்ளார்

இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தாக்குதலில் இருந்து 101 வயது முதியவர் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளார்.
அப்போது ஸ்பானிஷ் புளூவிலிருந்து தப்பிய முதியவர் - தற்போது கொரோனா வைரஸில் இருந்தும் தப்பியுள்ளார்
x
இத்தாலியின், ரோம் நகரில் கொரோனா தாக்குதலில் இருந்து 101 வயது முதியவர் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளார். கொரோனா தாக்குதலால், இத்தாலியில் கொத்து கொத்தாக மக்கள் மடியும் வேளையில், 101 வயதான முதியவர் குணமடைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கொரோனாவில் இருந்து மட்டுமல்ல, இதற்கு முன் ஸ்பானிஷ் புளூவிலிருந்தும் தப்பியவர்.. 1918 முதல் 1920 வரை இருந்த ஸ்பானிஷ் புளூவால், உலகமெங்கும் 5 கோடி மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் பிறந்த இவர், அந்த கொடிய புளூவில் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்