"போர் குற்றம் தொடர்பாக ஐ.நா. விசாரிக்க வேண்டும்" - காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை

இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றம் தொடர்பாக ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் நேரில் வந்து விசாரிக்க வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் குற்றம் தொடர்பாக ஐ.நா. விசாரிக்க வேண்டும் - காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை
x
இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றம் தொடர்பாக ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் நேரில் வந்து விசாரிக்க வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்நாட்டு போரின்போது காணாமல் போனவர்களை மீட்டுத் தரக் கோரி வவுனியாவில் சுழற்சிமுறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்கள், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் இலங்கையின் வட கிழக்கு பகுதிக்கு நேரடியாக வந்து தங்கள் துயரங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்