குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு - தங்களையும் மனுதாரராக சேர்க்க ஐ.நா. இடைக்கால மனு

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், தங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்கக் கோரி ஐநா சபையின், மனித உரிமை அமைப்பு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு - தங்களையும் மனுதாரராக சேர்க்க ஐ.நா. இடைக்கால மனு
x
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், தங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்கக் கோரி ஐநா சபையின், மனித உரிமை அமைப்பு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மனித உரிமைகள் சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றத்திற்கு உதவ தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு காட்டுவது, நியாயமான நோக்கத்தை அடைய போதுமானதாக இருக்காது எனவும் கூறியுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்