ஜப்பான், வுஹானில் இருந்து நாடு திரும்பிய 195 இந்தியர்கள்

சீனாவின் வுஹான் மற்றும் ஜப்பானில் இருந்து தனி விமானம் மூலம் 195 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஜப்பான், வுஹானில் இருந்து நாடு திரும்பிய 195 இந்தியர்கள்
x
கொரோனா காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஐந்து பயணிகள், ஏர்-இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஹரியானாவில் உள்ள ராணுவ முகாமில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 இந்தியர்கள், ஜப்பானிலேயே சிகிச்சைக்காக விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைபோல், கொரோனா கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இருந்து 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டினர் இந்திய விமானப்படையின் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்