காலை 11.40 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் டிரம்ப்

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிகழ்ச்சி நிரலை வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
காலை 11.40 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் டிரம்ப்
x
அமெரிக்காவின் வாஷிங்டனில் புறப்பட்ட அதிபர் டிரம்ப், காலை 11.40 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தை வந்தடைகிறார்.

* நண்பகல் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் டிரம்ப், பிற்பகல் 1.05 மணிக்கு "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

* பிற்பகல் 3.30 மணிக்கு ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்படும் டிரம்ப், மாலை 4.45 மணி - ஆக்ரா சென்றடைகிறார். 

* மாலை 5.15 மணிக்கு தாஜ்மகாலை பார்வையிடுகிறார், டிரம்ப். அங்கிருந்து மாலை 6.45 மணிக்கு டெல்லிக்கு விமானத்தில் புறப்படும் டிரம்ப், இரவு 7.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். 

* டெல்லியில் தங்கும் டிரம்ப்புக்கு, அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 25ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

* செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார், டிரம்ப்

*  செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் டிரம்ப்.

* செவ்வாய்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. 

* இரவு 7.30 மணிக்கு குடியரசு தலைவருடன் சந்திப்பு, விருந்து நிகழ்வு நடைபெற உள்ளது.

* இரவு 10 மணிக்கு இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்