இலங்கை அதிபருடன் ரஷ்ய ராணுவ தளபதி சந்திப்பு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரஷ்ய ராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபருடன் ரஷ்ய ராணுவ தளபதி சந்திப்பு
x
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரஷ்ய ராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் சந்தித்து பேசினார். கொழும்புவில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு ரஷ்யா பயிற்சி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தினவிழாவில் ரஷ்ய ராணுவ தளபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்