அதிபர் டிரம்பை நீக்கும் முயற்சிக்கு பின்னடைவு - சாட்சிகள் சிலரை விசாரிக்கும் தீர்மானம் தோல்வி

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டிரம்பை நீக்கும் ஜனநாயகக் கட்சியின் முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதிபர் டிரம்பை நீக்கும் முயற்சிக்கு பின்னடைவு - சாட்சிகள் சிலரை விசாரிக்கும் தீர்மானம் தோல்வி
x
அதிபர் டிரம்ப், தனது அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி பிரமுகர்களை பழிவாங்க உக்ரைன் உதவியை நாடியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கொண்டு வரப்பட்ட டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம், எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மை உள்ள பிரதிநிதித்துவ சபையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்நிலையில், செனட் சபையில் இந்த தீர்மானத்தின் மீது இறுதிக் கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது முக்கிய சாட்சிகள் சிலரை விசாரிக்க ஜனநாயக கட்சி செனட் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் 51க்கு49 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பதவி நீக்கும் தீர்மானம் மீதான இறுதி வாக்கெடுப்பு வரும் புதன்கிழமை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்