இலங்கை படையினர் அளித்த பயிற்சி : இந்திய கடற்படை அதிகாரிகள் நெகிழ்ச்சி

நல்லெண்ண பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவன் கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் அங்கு மனிதாபிமான பணிகள் குறித்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை படையினர் அளித்த பயிற்சி : இந்திய கடற்படை அதிகாரிகள் நெகிழ்ச்சி
x
நல்லெண்ண பயணமாக இலங்கை சென்றுள்ள  இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவன் கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் அங்கு மனிதாபிமான பணிகள் குறித்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20 ஆம் தேதி கொழும்பு சென்ற இந்திய கடற்படை  அதிகாரிகள் 30 பேர் புத்தளம் மாவட்டத்தில் இந்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல பயிற்சிகளை இலங்கை கடற்படையுடன்,  இணைந்து மேற்கொண்டனர். இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டது  தங்களுக்கு நல்ல  அனுபவமாக இருந்ததாக இந்திய கடற்படையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்