ஹாரி - மேகன் தம்பதியினர் தனித்து வாழ அனுமதி - இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிவிப்பு

பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளை துறந்து, தனித்து வாழ இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளார்.
ஹாரி - மேகன் தம்பதியினர் தனித்து வாழ அனுமதி - இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிவிப்பு
x
பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர்,  தங்களது அரச குடும்ப பொறுப்புகளை துறந்து சுதந்திர மனிதனாக வாழ விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் பிரிட்டனில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரச குடும்ப தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்திய பின்னர், தனது மகன் சார்லஸ் மற்றும் பேரன் வில்லியம்ஸ் உடன் ராணி எலிசபெத் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில்,  இளவரசர் ஹாரி தனித்துச்சென்று குடும்பம் நடத்த, எலிசபெத் ராணி அனுமதி அளித்தார். ஹாரி - மேகன் தம்பதியினர், தங்கள் விருப்பம் போல் புதிய வாழ்க்கை அமைத்துக்கொள்ள, தாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று ராணி எலிசபெத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்