பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் - போரிஸ் ஜான்சன் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் - போரிஸ் ஜான்சன் வெற்றி
x
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் முடிவு எட்டப்படாத மீண்டும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக வாக்கும் எண்ணும் பணிகள் நிறைவுபெறும் நிலையில், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 326 இடங்களைவிட அதிக இடங்களைப் பெற்று கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் போரிஸ் ஜான்சன் 358 இடங்களை பிடித்துள்ளார். பலத்த போட்டியை அளிக்கும் என கணிக்கப்பட்ட தொழிலாளர் கட்சி 203 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சி அமைக்கும்பட்சத்தில், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை உறுதியாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தோல்விக்கு பொறுப்பேற்று தொழிலாளர் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜெர்மி கார்பின் ராஜினாமா செய்துள்ளார். போரிஸ் ஜான்சன் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்