தொடங்கியது பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்

பிரிட்டன் தேர்தல் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கியுள்ளது.
தொடங்கியது பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்
x
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றம் கால அவகாசம் கோரியதால், திடீர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மீண்டும் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நாளை அதிகாலை 3.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் 3 வது முறையாக தேர்தல் நடைபெறுவதுடன், 100 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்