189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார்.
189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை
x
நேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்த முயற்சியின்போது 14 முறை, கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள சிகரங்களை இவர் அடைந்துள்ளார். ராணுவத்தில் பணிபுரிந்து  வந்த அவர், 80 நாட்களில் 5 உயரமான மலைகளை அடையவே முதலில் திட்டமிட்டதாகவும், பின்னர் அதற்கு விடுமுறை அளிக்கப்படாததை அடுத்து, வேலையை ராஜினாமா செய்துள்ளார். பின்னர் தனது சொந்த வீட்டை விற்று, 189 நாட்களில் 14 உயரமான மலைகளின் சிகரத்தை தொட்டு சாதனையை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்