இலங்கை அதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே, இன்று பதவி ஏற்பார் என, தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்சே
x
இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவின் பதவிக் காலம் ஜனவரி மாதம் முடிவடையும் நிலையில், புதிய அதிபருக்கான தேர்தல் நேற்றுமுன்நாள் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில்,  கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோத்தபய ராஜபக்சேவுக்கு, 52 புள்ளி இரண்டு ஐந்து சதவிகித வாக்குகளும், சஜித் பிரேமதாசாவுக்கு 41 புள்ளி ஒன்பது ஒன்பது சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்