இலங்கை அதிபர் தேர்தல் : விறுவிறு வாக்குப்பதிவு

உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தல் : விறுவிறு வாக்குப்பதிவு
x
உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இலங்கை பொது ஜன பெரமுனா வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே NUGEGODA என்ற இடத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, WEERAWILA என்ற இடத்தில் ஓட்டு போட்டார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதனிடையே, வட கிழக்கு மாகாணத்தில் வாக்காளர்கள் சென்ற வேன் மீது, மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்