ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு? - புதிய ஜனநாயக முன்னணியினர் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சந்தேக நபர்கள், புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மேடையிலேயே இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றஞ் சாட்டியுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சந்தேக நபர்கள், புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மேடையிலேயே இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றஞ் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவுக் கூட்டம் புத்தளம் தங்கொட்டுவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, தங்களுடைய கைகளில் ரத்தக்கறை இல்லை என்று சஜித் பிரேமதாஸ கூறினாலும் ஐக்கிய தேசியக் கட்சி மூத்த தலைவர்களின் கொலைகளுக்குப் பின்னால் சந்தேகங்கள் நிலவி வருவதாக கூறினார்.
Next Story