உலகத் தமிழர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள தமிழகத்தில், முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகத் தமிழர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
x
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பாக நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நீண்ட காலமாக பொருளாதாரம், வர்த்தகம், வாணிபம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் நல்லுறவு உள்ளதாகவும், தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றப்பாதையில் செல்வதாகவும் குறிப்பிட்டார்.  தொழில் கொள்கை, வாகன கொள்கை, தொழில் நுட்ப கொள்கை உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்குவதற்கான கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,  தமிழகத்தில் தொழில் தொடங்க உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்