'நாசா' ஆர்பிட்டர் அனுப்பிய புதிய புகைப்படங்கள் : விக்ரம் லேண்டர் குறித்த ஆதாரங்கள் இல்லை என நாசா தகவல்

தங்கள் விண்கலம் எடுத்துள்ள புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டர் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
நாசா ஆர்பிட்டர் அனுப்பிய புதிய புகைப்படங்கள் : விக்ரம் லேண்டர் குறித்த ஆதாரங்கள் இல்லை என நாசா தகவல்
x
தங்கள் விண்கலம் எடுத்துள்ள புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டர் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.  கடந்த மாதம் 7-ந் தேதி நிலவின் தென்துருவத்தில், தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது, சந்திரயான் 2-ல் இருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலமுறை முயன்றும் இஸ்ரோவால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடையே, சந்திரனின் தென்துருவ பகுதியை நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஆனால், அந்த புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டர் தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்