100-வது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டையர்கள்
பிரான்ஸ் நாட்டின் பவுலிகந்த்தை சேர்ந்த இரட்டையர்கள் தங்களது 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
பிரான்ஸ் நாட்டின் பவுலிகந்த்தை சேர்ந்த இரட்டையர்கள் தங்களது 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மேரி லெமாரி மற்றும் ஜெனிவிவ் ஆகிய இருவரும் கடந்த 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்துள்ளனர். தங்களது 20 வயதில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதாக இருவரும் நினைவு கூர்ந்தனர். போதையை தவிர்த்து , குடும்பத்துடன் நாட்களை செலவிட்டால் நூறு வயது வரை மகிழ்ச்சியாக வாழலாம் என இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Next Story