அமெரிக்க அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் : விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் : விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் தகவல்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், டிரம்புக்கு எதிராக முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் போட்டியிட உள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்த உக்ரேன் நாட்டிற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, டிரம்ப் மீது மக்கள் பிரதிநிதித்துவ சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் நிலையில், அமெரிக்க செனட்டில் அதன் மீதான விவாதம் நடைபெற்று, பதவி நீக்கம் செய்யப்படுவார். இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சபை விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் டிரம்பின் தனி வழக்கறிஞர் ரூடி கியூலானி தெரிவித்துள்ளார். பென்டகனும் இதுதொடர்பான தகவல்களை விசாணைக்கு வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு குடியரசு கட்சி பல்வேறு வகைகளில் இடையூறு செய்து வருவதாக ஜனநாயக கட்சி எம்.பி ஆதம் ஸ்கிப் குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்