இந்தியா, பாக். இடையே அணுஆயுதப் போர் நடந்தால்...? - "12.5 கோடி பேர் உடனடியாக உயிரிழப்பார்கள் "

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா, பாக். இடையே அணுஆயுதப் போர் நடந்தால்...? - 12.5 கோடி பேர் உடனடியாக உயிரிழப்பார்கள்
x
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க  ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது உலகில் 9 நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானும், இந்தியாவும் அதிகஅளவில் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளிடமும் 150 அணுஆயுதங்கள் தற்போது உள்ளதாக கூறப்படும் நிலை​யில், வரும் 2025-ஆம் ஆண்டில் இது 500 ஆக உயரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீருக்காக பலமுறை இரண்டு நாடுகளும் போர் நடத்தி உள்ளன என்றும்,  மீண்டும் போர் ஏற்பட்டால் அது, உலக நாடுகளின் இறப்பு விகிதத்தை 2 மடங்காக அதிகரிக்கும் என கொலரடா பல்கலைக்கழக பேராசிரியர் பிரெய்ன் டூன் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்