"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை" - நாசா அறிவிப்பு

இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை தங்களின் ஆர்பிட்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா அறிவிப்பு
x
 நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திராயன்- 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி தரை இறக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நாசாவின் லுனார் ஆர்பிட்டர் , விக்ரம் லேண்டர் தரையிரங்க திட்டமிடப்பட்ட இடத்தை கடந்த 17 ஆம் தேதி கடந்துள்ளது. அப்போது லூனார் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நாசா, புகைப்படங்களில் விக்ரம் லேண்டர்  தென்படவில்லை என்றும், நிலவின் பெரும் பள்ளங்களின் நிழலில் மறைந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது. லூனார் ஆர்பிட்டர் மீண்டும் அக்டோபர் மாதம் அந்த இடத்தை கடக்கும்போது விக்டர் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும் என்றும் நாசா கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்