இந்தோனேஷியா : சுவற்றில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பெண்

இந்தோனேஷியாவில், இளம்பெண் ஒருவர் ஹெல்மெட் கூட இல்லாமல், சுவரில் பைக் ஓட்டி செய்யும் சாகசம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேஷியா : சுவற்றில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பெண்
x
இந்தோனேஷியாவில், இளம்பெண் ஒருவர் ஹெல்மெட் கூட இல்லாமல், சுவரில் பைக் ஓட்டி செய்யும் சாகசம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 20 வயதே ஆன தேவி அப்பிரிலியானி, பைக்கில் சாகசம் செய்யும் வீராங்கனையாக உள்ளார். பொதுவாக ஆண்கள் மட்டுமே இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவர். இந்நிலையில் அப்பிரிலியானி ஹெல்மெட் கூட இல்லாமல், சுவரில் பைக் ஓட்டி சாகசங்களை செய்து வருவது அனைவரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வலிமையற்றவர்கள் என்ற கூற்றை தவறாக்கவும், பெண்களாலும் கஷ்டமான விஷயங்களை செய்ய முடியும் என்று காட்டவுமே இந்த சாகசத்தில் ஈடுபடுவதாக அப்பிரிலியானி தெரிவித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்