ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவரும் மூன்று பிரைமரி கேமரா...

சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா, உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவரும் மூன்று பிரைமரி கேமரா...
x
சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா, உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் டி.வி மற்றும் ஐபேட் ஆகியவற்றையும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்  அறிமுகம் செய்து வைத்தார். ஸ்லோ மோஷன் செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஐபோன்கள் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் என்று டிம் குக் தெரிவித்தார். மாதக்கட்டணம் 360 ரூபாய்க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள ஆப்பிள் நிறுவனம் முதல் கட்டமாக 100 நாடுகளில் இந்த சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஆப்பிளின் டி.வி. பிளஸ் அறிவிப்பு NetFlix, AmazonPrime போன்ற தளங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்