கனடாவை தாக்கிய டோரியன் புயல் : இருளில் மூழ்கிய 3.30 லட்சம் வீடுகள்

பஹாமஸ் தீவை பந்தாடிய சக்தி வாய்ந்த டோரியன் புயல் கனடா நாட்டின் ஹெலிபேக்ஸ் நகரை தாக்கியதில், 3 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.
கனடாவை தாக்கிய டோரியன் புயல் : இருளில் மூழ்கிய 3.30 லட்சம் வீடுகள்
x
பஹாமஸ் தீவை பந்தாடிய சக்தி வாய்ந்த டோரியன் புயல் கனடா நாட்டின் ஹெலிபேக்ஸ் நகரை தாக்கியதில், 3 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன. புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்