ஆஸி.யில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் : பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் போட ஒப்புதல்

தமிழக கால்நடை பல்கலைக் கழகம், சிட்னி பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸி.யில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் : பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் போட ஒப்புதல்
x
ஆறு நாள் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முதற்கட்டமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தை பார்வையிட்டார். பின்னர் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவுடன் அமைச்சர் கலந்துரையாடினார். அதை தொடர்ந்து, மாணவர், பேராசிரியர், விஞ்ஞானிகள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதை தவிர, சேலத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை பார்வையிடவும், அதில் சிட்னி பல்கலைக் கழக பங்கேற்பினை அளிக்கவும் அறிஞர்கள் குழு தமிழகம் வர உள்ளது. இந்த நிகழ்வுகளில், கோர்ட் சூட் உடையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்