டெஸ்லா ஆலையை பார்வையிட்ட முதல்வர் - தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா ஆலையை பார்வையிட்ட அவர், அந்த நிறுவனத்திடம் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் 'யாதும் ஊரே'' முதலீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் சுற்றுப் பயணத்தின்போது, கிங்ஸ் மருத்துவமனை மற்றும், சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Next Story