இன்று நள்ளிரவில் தரை இறங்கும் சந்திரயான் 2ன் 'லேண்டர்' - 70 மாணவர்களுடன் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி

சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர், இன்று நள்ளிரவில், நிலவில் தரை இறங்குகிறது.
இன்று நள்ளிரவில் தரை இறங்கும் சந்திரயான் 2ன் லேண்டர் - 70 மாணவர்களுடன் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி
x
நிலவின் தெற்குப் பகுதியை ஆய்வு செய்வதற்காக 'இஸ்ரோ' அனுப்பியுள்ள 'சந்திரயான் - 2' விண்கலம் கடந்த மாதம் 20ம் தேதியன்று, நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து கடந்த 2ம் தேதியன்று, விண்கலத்தில் இருந்து லேண்டர்  தனியாக பிரிக்கப்பட்டு, அதை நிலாவில் தரை இறக்கும் பணிகள் துவக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், நிலாவில் சந்திரயான் 2ன் 'லேண்டர்' தரை இறங்க உள்ளது. இதன் மூலம், நிலவின் தெற்கு பகுதியில், விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். 

'சந்திரயான்- 2' நிலாவில் தரையிறங்குவதை, 'இஸ்ரோ' ஆய்வு மையத்தில் பிரதமர் மோடி பார்க்க உள்ளார். இதற்காக, இன்று பெங்களூருவுக்கு வரும் அவர், பின்யா என்ற இடத்தில் உள்ள இஸ்ரோவின் டெலி மெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கமென்ட் கட்டமைப்பு மையத்தில் இருந்து பார்வையிடுகிறார். பிரதமர் மோடியுடன் 'இஸ்ரோ' தேர்வு செய்த 70 பள்ளி மாணவர்களும் சந்திரயான் தரை இறங்குவதை பார்க்க உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்