பஹாமஸ் தீவை பந்தாடிய 'டோரியன்' புயல்
கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டோரியன் புயல், பஹாமஸ் தீவை சூறையாடியது.
கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டோரியன் புயல், பஹாமஸ் தீவை சூறையாடியது. அப்போது மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக மரங்கள் பேயாட்டம் ஆடின. மின்கம்பங்கள் அடியோது சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. பஹாமஸை பந்தாடிய பயங்கர புயலான டோரியன், தற்போது, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Next Story

