தொடரும் ஹாங்காங் போராட்டம் : குஜராத் வைர வியாபாரம் பாதிப்பு

ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் ஹாங்காங்குக்கு அளித்த உரிமைகள் தொடர வலியுறுத்தி, சீனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
தொடரும் ஹாங்காங் போராட்டம் : குஜராத் வைர வியாபாரம் பாதிப்பு
x
ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் ஹாங்காங்குக்கு அளித்த உரிமைகள் தொடர வலியுறுத்தி, சீனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. மக்கள் ஹாங்காங் விமான நிலையத்தை சுற்றிலும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதால், இந்திய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத்தின் வைர வியாபாரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சூரத் மற்றும் மும்பையில் இருந்து பட்டை தீட்ட செல்லும் வைர பார்சல்கள் சுமார் 25 சதவீதம் அளவுக்கு விமான நிலையத்திலேயே முடங்கி போய் உள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ஹாங்காங் இடையிலான வைர வர்த்தகம் 35 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்