கோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் : இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் முறையீடு

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே, தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சிறிசேனாவிடம் முறையிட்டுள்ளார்.
கோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் : இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் முறையீடு
x
இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே, தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சிறிசேனாவிடம் முறையிட்டுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், முன்னாள் அதிபர் ராஜபக்சே தமது கட்சி சார்பில் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். ராஜபக்சே அதிபராக இருந்தபோது, இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்சே பணியாற்றினார். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அதிபர் சிறிசேனாவை சந்தித்து முறையிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பயங்கரவாத குழு, தம்மை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாத புலனாய்வு போலீஸ் இயக்குனருக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்