"நிலைமையை உற்று கண்காணித்து வருகிறோம்" - பாதிக்கப்பட்ட சமூகத்தை அழைத்து பேச அமெரிக்கா யோசனை

ஜம்மு காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளை உற்று கவனித்து வருவதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டேகஸ் தெரிவித்துள்ளார்.
நிலைமையை உற்று கண்காணித்து வருகிறோம் - பாதிக்கப்பட்ட சமூகத்தை அழைத்து பேச அமெரிக்கா யோசனை
x
ஜம்மு காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளை உற்று கவனித்து வருவதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டேகஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான இந்திய அரசின் அறிவிப்பையும், அந்த மாநிலத்தை பிரிக்கும் இந்திய அரசின் முடிவு குறித்தும் கவனத்தில் எடுத்துள்ளோம். உள்நாட்டு பிரச்சினை இது என இந்திய அரசு கூறியுள்ளது என்றும், சிலர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், பாதிக்கப்பட்ட சமூகம் மற்றும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்றும், சர்வதேச எல்லைக் கோட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்