அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் உயிரிழப்பு
x
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ நகரிலேயே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வணிக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர், திடீரென்று பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சராமாரியாக சுட்டுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு உயிரை காப்பாற்றிகொள்ள ஓடினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் உயிருக்கு போராடி வருகின்றனர். தாக்குதல் நடந்த வணிக வளாகத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், அங்கிருந்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததும், அந்த நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 24 வயது அமெரிக்க இளைஞர் என தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்