மாலத்தீவு முன்னாள் அதிபர் விசாரணைக்கு பின் அந்நாட்டு அரசிடம் இன்று ஒப்படைப்பு

தூத்துக்குடிக்கு கப்பலில் ரகசியமாக தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் 2 நாள் விசாரணைக்கு பின்பு அந்நாட்டு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறார்.
மாலத்தீவு முன்னாள் அதிபர் விசாரணைக்கு பின் அந்நாட்டு அரசிடம் இன்று ஒப்படைப்பு
x
தூத்துக்குடிக்கு கப்பலில் ரகசியமாக தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் 2 நாள் விசாரணைக்கு பின்பு அந்நாட்டு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறார். மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி வந்த இழுவை கப்பலை நடுக்கடலில் மடக்கி, இந்திய கடலோர காவல் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 9 ஊழியர்களுடன் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் கப்பலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், மாலத்தீவில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தஞ்சமடைய வேண்டி  தப்பித்து வந்ததாக அகமது ஆதீப்  தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இருநாட்டு கடல்  எல்லையில் மாலத்தீவு அதிகாரிகளிடம் அகமது ஆதீப் இன்று ஒப்படைக்கப்படுகிறார். 


Next Story

மேலும் செய்திகள்