பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர் - ராஜபக்சே

பிரபாகரன் காலத்தில் இலங்கை மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர் - ராஜபக்சே
x
பிரபாகரன் காலத்தில் இலங்கை மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளும் நிகழ்வில் ராஜபக்சே பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரபாகரனின் காலத்தில்கூட மத வழிபாடுகளுக்காக மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக சென்ற நிலையில், இப்போது பயத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை ரணில் - மைத்திரி அரசுகளுக்கு கிடையாது என்று கூறிய அவர், தம்மால் அமைய உள்ள புதிய அரசுக்கே அதற்கான உரிமையிருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்