முடங்கிய வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம்

வழக்கம் போல் செயல்படும் டிவிட்டர் சமூக வலைதளம்
முடங்கிய வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம்
x
நேற்று காலை முதல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் ஆகிய 3 சமூக வலைதளங்களிலும் உள்நுழைதல், பதிவுகளை ஷேர் செய்தல் மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதில் பயனாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ஆனால் டிவிட்டர் சமூக வலைதளம் வழக்கம்போல் இயங்கியது. இந்த பாதிப்புகள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இயல்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் ஓரளவு நன்றாக செயல்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் ஆடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்வது பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவிறக்கம் செய்வது தற்போதும் பிரச்சினையாகவே உள்ளதாகவும், தரவுகளை அனுப்புவது இயல்பாகி விட்டதாகவும் இணையதள பயன்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்