உலகை உலுக்கும் தந்தை மகளின் புகைப்படம்

டி- ஷர்ட்-க்குள் 23 மாத குழந்தையை வைத்து ஆற்றைக் கடந்து, அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர், குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகை உலுக்கும் தந்தை மகளின் புகைப்படம்
x
டி- ஷர்ட்-க்குள் 23 மாத குழந்தையை வைத்து ஆற்றைக் கடந்து, அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர், குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மீட்கப்பட்ட தந்தை - மகளின் புகைப்படம், உலகை உலுக்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சிரியா உள்நாட்டு போரின் காரணமாக,  துருக்கி வழியாக கனடா தப்பிச் செல்ல முயன்ற ஒரு குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளுடன் கடலில் மூழ்கி இறந்தனர். அதில் ஒரு சிறுவனில் உடல் துருக்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய புகைப்படம் உலகை உலுக்கியது. இதேபோல், தற்போது அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றவர், தமது 23 மாத குழந்தையுடன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் உலகை உலுக்கி உள்ளது. எல்சால்வடார் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள், மெக்ஸிகோவில் இருந்து டெக்ஸாஸ் மாகாண எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய ரியோ கிரான்டே ஆற்றை படகு மூலம் கடக்க முயற்சி செய்துள்ளனர். எந்த பாதுகாப்பும் இல்லாத இந்த ஆபத்தான பயணத்தில் ஆஸ்கர் ஆல்பர்டோ என்பவர்  தமது 23 மாத குழந்தை நனையாமலிருக்க டி-ஷர்ட்டுக்குள் நுழைத்துக் கொண்டு பயணம் செய்தார். ஆனால், எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து தந்தையும், மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  மெக்ஸிகோ போலீசார் அவர்களது உடலை மீட்டுள்ள நிலையில், தந்தையின் டி ஷர்டுக்குள் உயிரிழந்த 23 மாத குழந்தையின் புகைப்படம் வெளியாகி உலகை உலுக்கி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்