செக் குடியரசு மக்கள் பிரமாண்ட பேரணி : பிரதமர் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தல்
பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தி செக்குடியரசு தலைநகர் பிராக்கில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தி செக்குடியரசு தலைநகர் பிராக்கில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இதில் பங்கேற்றனர். செக்குடியரசு ஜனநாயகத்தை பாதுகாக்க பிரதமர் பாபிஸ் பதவி விலக வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பிரதமர் ராஜினாமாவை வலியுறுத்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கையில் வைத்திருந்தனர். பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் தன்னிச்சையாக செயல்படுவதோடு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
Next Story