ரஷ்யா : உணவைத் தேடி இடம்பெயர்ந்த பனிக்கரடி - அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த சோகம்

ரஷ்யா நாட்டின் சைபீரியாவை அடுத்த நோரில்ஸ்க் தொழில்துறை நகருக்குள் புகுந்த அரிய வகை பெண் பனிக்கரடி ஒன்று உணவு தேடி அலைந்து திரியும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா : உணவைத் தேடி இடம்பெயர்ந்த பனிக்கரடி - அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த சோகம்
x
ரஷ்யா நாட்டின் சைபீரியாவை அடுத்த நோரில்ஸ்க் தொழில்துறை நகருக்குள் புகுந்த அரிய வகை பெண் பனிக்கரடி ஒன்று உணவு தேடி அலைந்து திரியும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வாழ்விடத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்த பனிகரடிக்கு உணவு எதுவும் கிடைக்காததால், நோய்வாய்ப்பட்டு, மிகவும் பலவீனமாக காணப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த வனவிலங்கு நிபுணர்கள், கரடியை மீட்டு சென்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு நோரில்ஸ்க் நகருக்குள் பனிகரடி வந்ததால், அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சாலையோரம் நின்று வேடிக்கை பார்த்தனர். 


Next Story

மேலும் செய்திகள்