பிரான்ஸ் மலைப்பகுதியில் கயிற்றின் மீது அந்தரத்தில் நடந்த வீரர்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்...

பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜியான்னெட் மலைப்பகுதியில் நடைபெற்ற ஸ்லாக்லைன் பந்தயத்தில், சுமார் 300 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது நடந்து, வீரர் ஒருவர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
பிரான்ஸ் மலைப்பகுதியில் கயிற்றின் மீது அந்தரத்தில் நடந்த வீரர்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்...
x
பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜியான்னெட் மலைப்பகுதியில் நடைபெற்ற ஸ்லாக்லைன் பந்தயத்தில், சுமார் 300 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது நடந்து, வீரர் ஒருவர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். இரு மலை சிகரங்களுக்கு இடையே பொருத்தப்பட்டிருந்த கயிற்றின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் நடந்து செல்வதே, ஸ்லாக்லைன் விளையாட்டு. இந்த போட்டியில் 20  பேர் பங்கேற்ற நிலையில், 800 மீட்டர் நீளம், பூமியில் இருந்து 300மீட்டர் உயரத்தில், மேட்டிஸ் ரெய்சினர் என்பவர், 19 நிமிடம், 50 நொடிகளில் கடந்து சென்றார். கயிற்றின் மீது, எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அவர் நடந்து சென்ற காட்சி, பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்