இங்கிலாந்து ராணி பதவியேற்று நாளை 66ம் ஆண்டு விழா

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், முடிசூட்டிய 66ம் ஆண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது.
இங்கிலாந்து ராணி பதவியேற்று நாளை 66ம் ஆண்டு விழா
x
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், முடிசூட்டிய 66ம் ஆண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. உலகின் மிக பெரிய பாரம்பரியத்தை கொண்ட இங்கிலாந்து மன்னர் பரம்பரையில் பிறந்த எலிசபெத், கடந்த 1953ம் ஆண்டு ஜூன் 2ம் தேதியன்று முடி சூட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 27. கடந்த 66 ஆண்டுகளாக தொடர்ந்து நீண்ட காலம் இங்கிலாந்து ராணியாக இருந்து வரும் இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 92 வயதாகிறது. இந்நிலையில், அவர் ராணியாக முடி சூட்டிய 66ம் ஆண்டு விழா, இங்கிலாந்து அரண்மனையில் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 66 ஆண்டுகளுக்கு முன் அவர் முடிசூட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்