துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியான சோகம் : படுகாயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியான சோகம் : படுகாயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
விர்ஜினியா பீச் பகுதியில் உள்ள முனிசிபல் கட்டிடத்தில் நுழைந்த நபர் திடீரென கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. எனினும் கண்மூடித்தனமாக அவர் சுட்டதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவலர் உள்ளிட்ட  படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்தார். அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாரா அல்லது போலீசுடன் நடந்த சண்டையில் உயிரிழந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்