விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழா : சுமார் ஆயிரம் பேரிடம் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சுமார் 1000 பேரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைகுலுக்கியது, பட்டம் பெற்ற மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழா : சுமார் ஆயிரம் பேரிடம் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்
x
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சுமார் 1000 பேரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைகுலுக்கியது, பட்டம் பெற்ற மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.  இந்த பட்டமளிப்பு விழாவில் 989 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவின் போது, ஒவ்வொருவரிடமும் அதிபர் டிரம்ப் கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பட்டங்களை பெற்றனர். மேலும் அங்கிருந்த அதிகாரிகளுடனும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறினார்.  இதற்காக பல மணி நேரங்களை டிரம்ப் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்