இலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்
x
இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 
மாதந்தோறும்  அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்பு குறித்து தலைநகர் கொழும்புவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று, தங்களுடைய கருத்துக்களை அதிபர் சிறிசேனவிடம் தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய சபாநாயகர் கரு ஜெயசூரியா,  இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கியதாக குறிப்பிட்டார்.  இதனால் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்