சீனாவில் வழக்கத்தை விட அதிக சம்பள உயர்வு...

சீனாவில் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
சீனாவில் வழக்கத்தை விட அதிக சம்பள உயர்வு...
x
சீனாவில் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. சீன தேசிய புள்ளிவிவரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள்படி, பல்வேறு துறைகளிலும் கடந்த ஆண்டைவிட சராசரி சம்பள உயர்வு இந்த ஆண்டு அதிரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கு சராசரி சம்பளம் உயர்வு 11 சதவீதமாகவும், ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நகர்புற தனியார் நிறுவன  தொழிலாளர்களின் சம்பளம் 8 சதவீதம் உயர்ந்து, ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில்  5 லட்ச ரூபாயாகவும் உள்ளது. உதிரிபாக உற்பத்தி துறை, உயர் தொழில்நுட்பம், புத்தாக்க துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.  எரிவாயு, ரசாயனம், நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதுடன், ஊதிய உயர்வும் அதிகமாக உள்ளது. தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்துள்ளதால் நாட்டில் வேலைவாய்ப்பு நிலையாக உள்ளதாக அறிக்கை சுட்டிக் கடடியுள்ளது. அதன் காரணமாக தொழில்நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் சீனாவின் தேசிய வருமானமும் ஏற்றம் கண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்